ஐ.எஸ் தலைவர் பலி

இஸ்லாமிய அரசு குழுவின் தலைவர் அபூ அல் ஹசன் அல் ஹஷ்மி அல் குரைஷி கொல்லப்பட்டதாக அந்தக் குழு அறிவித்துள்ளது.

ஐ.எஸ். குழு வின் பேச்சாளர் ஓடியோ செய்தி ஒன்றில் இது பற்றி குறிப்பிட்டிருப்பதோடு, “இறைவனின் எதிரிகளுடனான” போரின்போது அவர் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். எனினும் அது பற்றி மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் வடமேற்கு சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின்போதே அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ஐ.எஸ் குழுவின் முந்தைய தலைவரான அபூ இப்ராஹிம் அல் ஹாசிமி அல் குரைசி கடந்த மார்ச் மாதம் வட மேற்கு சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது தன்னைத் தானே வெடிக்கச் செய்துகொண்டதை அடுத்தே அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

Fri, 12/02/2022 - 10:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை