ஆப்கான் பாடசாலையில் குண்டு வெடிப்பு; பலர் பலி

வடக்கு அப்கானிஸ்தானில் மதப் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 26 பேர் காயமடைந்தனர்.

சமாமன்கா மாகாணத்தில் உள்ள அய்பக் என்ற நகரில் கடந்த புதனன்று (30) மக்கள் தொழுகை முடித்து வெளியே வரும்போது இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களாவர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் உரிமை கோரவில்லை. தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தது தொடக்கம் ஆப்கானில் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான தாக்குதல்களின் பெரும்பாலானவற்றுக்கு இஸ்லாமிய அரசு குழுவின் உள்ளுர் பிரிவே உரிமை கோரி வருகிறது.

Fri, 12/02/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை