இந்திய - சீன இராணுவம் எல்லையிலிருந்து வாபஸ்

கிழக்கு லடாக்கின் கோக்ரா ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் இந்திய–சீன இராணுவம் படைகளை திரும்ப பெறும் நடவடிக்கை நிறைவடைந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய–சீன இராணுவ படைகளை திரும்ப பெற்று எல்லையில் அமைதியை நிலைநாட்ட, இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடந்து வருகிறது.

16ஆவது சுற்றின் போது கோக்ரா ஸ்பிரிங்க்ஸ் பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளில் படைகளை திரும்ப பெற இருதரப்பும் ஒப்புக்கொண்டன. இந்த நடவடிக்கை கடந்த வாரம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 09/20/2022 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை