AIA ஸ்ரீலங்கா தலைவராக டான் ஹக் லே நியமனம்

கடந்த 2022 ஜுலை அமுலுக்கு வரும் வகையில் பணிப்பாளர் சபையின் புதிய தலைவராக டான் ஹக் லேயின் நியமனத்தை AIA ஸ்ரீலங்கா அறிவித்திருந்தது. AIA குழும லிமிடட் நிறுவனத்தின் பிராந்தியப் பிரதான நிறைவேற்று அதிகாரியான டான் ஹக் லே தாய்லாந்து, சிங்கப்பூர், புரூனே, மலேசியா, கம்போடியா, மியன்மார் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் AIA இன் வியாபாரச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாகப் பணியாற்றுவதோடு தற்போது இதனை இலங்கையிலும் தொடரவுள்ளார்.

டான் ஹக் லே AIA குழுமத்தில் 11 வருட அனுபவத்தைப் பெற்றுள்ளதோடு ஆசியாப் பிராந்தியத்தின் காப்புறுதித் துறையில் பரந்துபட்ட பிரிவுகளில் 30 வருடத்திற்கும் அதிகமான அனுபவத்தின் மூலம் தான் பெற்றுக் கொண்ட அறிவு மற்றும் மூலோபாய அனுபவம் ஆகியவற்றினை இலங்கைக்கு கொண்டு வருகின்றார். இவர் ஹெரியட் வாட் பல்கலைக்கழகத்தில் (ஐக்கிய இராச்சியம்) பிரயோக கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல் இளமானி (முதல் வகுப்பு மேதகைமை) பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இன்ஸ்டிடியூட் ஒஃப் ஆக்சுவரீஸின் (ஐக்கிய இராச்சியம்) உறுப்பினராகவும் உள்ளார்.

டான் ஹக் லேவின் நியமனம் AIA ஸ்ரீலங்காவிற்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகும். மேலும் தற்போது இலங்கையில் நிலவும் மிகவும் சவாலான வியாபாரச் சூழலுக்கு மத்தியில் நிறுவனத்தையும் மற்றும் வியாபாரத்தையும் வெற்றிகரமாக வழிநடத்துவதற்கு இதன் மூலமாக மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

லேவின் நியமனம் AIA இன்ஷுரன்ஸ் லங்காவின் பணிப்பாளர் சபைக்கு AIA ஸ்ரீலங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி சத்துரி முனவீரவின் நியமனத்தின் போது வழங்கப்பட்டிருந்தது. AIA ஸ்ரீலங்கா இலங்கையில் தனது வணிகத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து நியமிக்கப்பட்ட முதலாவது இலங்கையரும் மற்றும் முதலாவது பெண் நிறைவேற்று அதிகாரியுமான சத்துரி முனவீர தனது கடமைகளை 2022 மே மாதம் பொறுப்பேற்றிருந்தார்.

இலங்கையின் காப்புறுதித் துறையில் 25 வருடத்திற்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டுள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த அதிகாரியாகவே சத்துரி திகழ்கின்றார். பிரதான நிறைவேற்று அதிகாரியாக நிறுவனத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர் சத்துரி ஆயுள் காப்புறுதிச் செயற்பாடுகள், நிறுவனச் சட்டம், நிறுவனச் செயலாளர் மற்றும் வெளியுறவுகளுக்குப் பொறுப்பான AIA இன்ஷுரன்ஸ் லங்காவின் சட்ட, நிர்வாக மற்றும் செயற்பாடுகளுக்கான பிரதான பணிப்பாளர் அதிகாரியாகவும் பணியாற்றியிருந்ததோடு, இதற்கு முன்னர் நிறுவனத்தின் பிரதான மனிதவள அதிகாரியாகவும் மற்றும் பிரதான இணக்க அதிகாரியாகவும் பதவி வகித்திருந்தார்.

சத்துரி 2006 இலிருந்தே நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழுமத்தில் உறுப்பினராகப் பதவி வகிப்பதோடு மூலோபாயத் திட்டமிடல் மற்றும் வியாபாரச் சாதனைகளிலும் பிரதான பங்கு வகிக்கின்றார். AIA ஸ்ரீலங்கா AIA குழுமத்தின் சிக்கலான பெருநிறுவன மறுசீரமைப்பிலிருந்து முழுமையாகச் சொந்தமாக்கப்பட்ட துணை நிறுவனமாக மாறுவதற்கு இவரே வழிநடத்தியிருந்தார்.

AIA ஸ்ரீலங்காவின் பணிப்பாளர் சபைக்கான இப்புதிய நியமனமானது சத்துரியின் தொழில் ரீதியான வாழ்க்கைப் பயணத்தில் நிச்சயமாக மற்றுமொரு மிகச்சிறந்த மைல்கல்லாகவே அமையும்.

AIA 100 வருட வரலாற்றுச் சிறப்பைக் கொண்ட நிறுவனமாக பான் ஆசியா ஆயுள் காப்புறுதிக் குழுமத்தின் சுயாதீனமாகப் பொதுப் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்வதோடு, ஆசியா முழுவதும் 18 காப்புறுதிச் சந்தைகளில் மிகவும் வெற்றிகரமாக தனது வணிகத்தை முன்னெடுத்தும் வருகின்றது.

Sun, 09/25/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை