குமார வெல்கமவும் இணக்கம் தெரிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து முழு ஆதரவை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக ஜனாதிபதியை நேற்று அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்.

'நான் அமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்படுபவன் அல்லன். 8 ஆண்டுகள் பதவிகள் இன்றி இருந்தவன். ரணிலை ஆதரிக்கவில்லை. ஆனால், சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவேன், அதனை ஆதரிப்பேன்' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சர்வ கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் மூன்று கட்சிகள் நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தன.

Fri, 08/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை