டுபாயிலிருந்து 3 கிலோ எடை தங்கம் கடத்தியவர்கள் கைது

பல செல்போன்களும் கைப்பற்றப்பட்டன

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 03 கிலோ தங்கம் மற்றும் கையடக்கதொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட 02 பெண்கள் உட்பட

06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் டுபாயிலிருந்து நேற்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சுங்கப் பிரிவினரால் சோதனையிடப்பட்டதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அணிந்திருந்த மற்றும் அவர்களின் பயணப் பைகளில் மறைத்து வைத்திருந்த 3.158 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அத்தோடு அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 ஐபோன்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆறு சந்தேக நபர்களில், 45, 48, 50 மற்றும் 51 வயதுடைய நால்வரும் அக்குறணையைச் சேர்ந்தவர்களாவர், இதேவேளை, 40 மற்றும் 41 வயதுடைய நீர்கொழும்பு மற்றும் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஆறு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்திலுள்ள சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

Wed, 08/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை