உக்ரைனுக்கு அருகிலுள்ள ரஷ்ய நகரத்தில் வெடிப்பு: மூவர் பலி

உக்ரைன் எல்லைக்கு அருகில் இருக்கும் ரஷ்ய நகரான பெல்கொரோட்டில் இடம்பெற்ற வெடிப்புகளில் மூவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த வெடிப்புகளால் 11 தொடர்மாடி கட்டடங்கள் மற்றும் குறைந்தது 37 தனியார் குடியிருப்புக் கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதாக அந்தப் பிராந்திய ஆளுநர் வியாசெல்சோவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்புகளால் வான் பாதுகாப்பு அமைப்பு இயக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் இந்த அறிவிப்பு சுயாதீனமாக உறுதி செய்யப்படாததோடு இது பற்றி உக்ரைன் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஆனால் அந்தத் தாக்குதல்களுக்கு உக்ரைனியப் படைகள் தான் காரணம் என்று ரஷ்யா தரப்பில் கூறப்படவில்லை.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததிலிருந்தே, உக்ரைன் பெல்கொரொட் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளது.

Mon, 07/04/2022 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை