ஆரம்பகால பிரபஞ்சத்தின் தெளிவான படம் வெளியீடு

ஆரம்பகாலப் பிரபஞ்சத்தின் மிகத் தெளிவான வர்ணப் படத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி வெளியிட்டுள்ளது. 13 பில்லியன் ஆண்டுக்கு முன் உள்ள பிரபஞ்சத்தின் தோற்றத்தை காண்பிக்கும் படமே வெளியிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான விண்மீன் மண்டலங்கள் தென்படும் அந்தப் படத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டார்.

ஸ்மக்ஸ் 0723 என்ற விண்மீன் மண்டலங்களை இந்தப் படத்தில் காணலாம். இந்தப் படத்தைத் தயாரிக்க 12.5 மணி நேரமானது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் பிரபஞ்சத்தினுள் இன்னும் ஆழமாகச் செல்லமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனதைக் கணக்கில் கொண்டு அப்போது தோன்றிய நட்சத்திரங்கள் மற்றும் அங்கு மனிதர்கள் வாழத் தகுதிகொண்ட கிரகங்களைக் கண்டறியும் முயற்சியாக கடந்த ஆண்டு விண்வெளியில் 10 பில்லியன் டொலர் செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் எனும் சக்திவாய்ந்த தொலைநோக்கியை நாசா நிறுவியது.

நட்சத்திரங்கள், துகள்கள் என சிதறிய ஒளிக்கதிர்களால் ஓவியம்போல காட்சியளிக்கும் இந்தப் படத்தைக் கண்ட பல விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் தோற்றத்தை நெருங்கி விட்டதாகவும் இது அறிவியல் உலகின் மகத்தான சாதனை எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Wed, 07/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை