ரணிலுடன் இணைந்து பணியாற்ற USA விருப்பம்

தூதுவர் ஜூலிசுங் டுவிட்டரில் பதிவு

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது நியமனம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தின் விரைவான உருவாக்கம் நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதல் படியாகும் என்றார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கும், முக்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இலங்கை மக்களுக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Sat, 05/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை