எரிவாயு கோரி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

எரிவாயு கோரி கிரேன்ட்பாஸ் பகுதியில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நேற்று அதிகாலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பு - ஹைலெவல் வீதியின் நாவின்ன பகுதியில் நேற்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இவற்றை தொடர்ந்து, மட்டக்களப்பு - செங்கலடி சந்தியில் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல்கலைகழக மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு பல்கலைகழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இருந்து பேரணியாக சென்ற மாணவர்கள் செங்கலடி சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இவற்றை தொடர்ந்து, மட்டக்களப்பு - செங்கலடி சந்தியில் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.பல்கலைகழக மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு பல்கலைகழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இருந்து பேரணியாக சென்ற மாணவர்கள் செங்கலடி சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 

Mon, 05/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை