முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலிமுகத்திடலில் அனுஷ்டிப்பு

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தி வரும் பகுதியில் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோரால் நேற்று இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது  காணாமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூரும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலேயே இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

 

Thu, 05/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை