வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள 'அசனி' புயல்; பிற்பகலில் தாக்கலாம்

- இலங்கையின் ஒரு சில இடங்களில் பிற்பகலில் மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்றையதினம் (07) பிற்பகல் 5.30 மணிக்கு வட அகலங்கு 10.2N மற்றும் கிழக்கு நெட்டாங்கு 90.5E இற்கு அருகில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த சில மணிநேரங்களில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடலில் ஒரு சூறாவளி புயலாக வலுவடைந்து இன்றையதினம் (08) பிற்பகல் 5.30 மணிக்கு கிழக்கு-மத்திய வங்காளக்கடலில் கடும் சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.

இப்புயலுக்கு இலங்கையினால் 'அசனி' என பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளுக்கு மீனவ மற்றும் கடற்படை சமூகம் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இன்று (08) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகலில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் கிழக்கு, தெற்கு, மேற்கு கடற்கரையை அண்டிய பிரதேசங்கிளல் முற்பகல் வேளையில சிறிதளவு மழை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Sun, 05/08/2022 - 09:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை