ரஷ்யத் தாக்குதலால் உக்ரைனின் டொன்பாஸ் பகுதி முற்றாக அழிவு

உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யாவின் புதிய தாக்குதல்கள் அந்தக் கிழக்குப் பிராந்தியத்தை நரகமாக மாற்றி இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா அர்த்தமற்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கடந்த பெப்ரவரியில் முழு வீச்சில் படையெடுப்பை மேற்கொண்ட ரஷ்யா உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவதில் தோல்வி அடைந்ததை அடுத்தே டொன்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்காக உக்கிர தாக்குதல்களை ஆரம்பித்தது. ஒன்றிணைந்த டொன்பாஸ் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சார்பிலேயே ரஷ்யா உரிமை கோரி வருகிறது.

‘ஆக்கிரமிப்பாளர்கள் அழுத்தத்தை அதிகாரிக்க முயற்சிக்கின்றனர். அங்கு நரகமாக உள்ளது என்று கூறுவது மிகையாகாது’ என்று கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய செலென்ஸ்கி கூறினார்.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் செவெரொடொனட்ஸ்க் நகரில் கடந்த வியாழனன்று நடத்தப்பட்ட கொடிய மற்றும் அர்த்தமற்ற குண்டுவீச்சில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

‘மத்திய உக்ரைனில் இருக்கும் ஒடெசா பிராந்தியத்தின் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. டொன்பாஸ் முற்றாக அழிந்துவிட்டது’ என்றும் அவர் கூறினார்.

 

Sat, 05/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை