பிரபல திரைப்பட நடிகர் வில்சன் கரு நேற்று காலமானார்

இலங்கை சிங்கள திரைப்படத்துறையில் மூத்த வில்லன் நடிகரும், சண்டைப்பயிற்சி இயக்குனருமான வில்சன் கருணாரத்ன தனது 79 ஆவது வயதில் நேற்று காலமானார்.

சிங்கள சினிமாவின் சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் கருணாரத்ன, 240க்கும் மேற்பட்ட படங்களில் பல வகைகளில் முதன்மையாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் வில்சன் கருவின் முதல் சினிமா தோற்றம் 1974 இல் சுபையர் மகீம் இயக்கிய ஹதவத் நெத்தோ என்ற திரைப்படத்தில் இருந்து ஆரம்பமானது. யகதய (1977), ஜீவன கங்கா (1974), சரதியேல்கே புத்த (1976), ஹிதுவோத் ஹித்துவமாய்”(1977), ஹித மிதுர (1978), செலினேஜ் வளவ்வ (1978), வீர புரான் அப்பு மற்றும் கிவுலே கெதரா ஆகிய படங்களிலும் வில்சன் கரு நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Wed, 05/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை