குரங்கம்மை: மேலும் பல நாடுகளில் பரவ வாய்ப்பு

உலக சுகாதார அமைப்பு பல நாடுகளில் கண்காணிப்பை விரிவுபடுத்தி இருக்கும் நிலையில் குரங்கம்மை நோய் மேலும் பல நாடுகளில் அடையாளம் காணப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலில் 80க்கும் அதிகமான இந்த வைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் இதனால் பரந்த அளவான அச்சுறுத்தல் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. “நோய் அறிகுறிகளுடனான உடல் ரீதியில் நெருங்கிப் பழகுபவர்களிடையே நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக கிடைக்கப்பெறும் தகவல்கள் மூலம் தெரிகிறது” என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு பெரும்பாலும் மிதமாகவே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சில வாரங்களிலேயே குணமடைந்து விடுவார்கள்.

“வெளிநாடு செல்லாமல் உள்நாடு அல்லது உள்ளுரில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிவதில் சிரமம் உள்ளது. இதனால் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். ஆண்களோடு ஆண்கள் ஓரினச்சேர்க்கை செய்யும் நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Tue, 05/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை