பெற்றோலில் கலப்படம் வெளியே வாங்காதீர்கள்

பொதுமக்களுக்கு அமைச்சர் கஞ்சன எச்சரிக்கை!

மூன்றாம் தரப்பினரிடம் பெற்றோல் வாங்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.​

சில நபர்கள், எரிபொருட்களை சேகரித்து, ஏனைய திரவங்களுடன் பெற்றோலியப் பொருட்களைக் கலந்து விற்பனை செய்வதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்தகைய வியாபாரங்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டாம் எனவும், இத்தகைய வியாபாரங்கள் குறித்து அறிவிக்குமாறும் பொதுமக்களை அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் எரிபொருளைச் சேர்ப்பதும், பெற்றோலியப் பொருட்களை மற்ற திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டாம் எனவும், அது தொடர்பில் தெரிவிக்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tue, 05/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை