வெள்ளை மாளிகை பேச்சாளர் பதவிக்கு கறுப்பினத்தவர் தேர்வு

வெள்ளை மாளிகை பேச்சாளராக முதல் முறை கறுப்பினத்தவர் மற்றும் வெளிப்படையாக தம்மை ஓரினச் சேர்க்கையாளர் என்று அறிவித்துக் கொண்ட ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டிருக்கும் 44 வயதான கரீன் ஜீன் பீர், அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்வானது தொடக்கம் அவரது நிர்வாகத்தின் முதன்மை பிரதி ஊடக செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தற்போது வெள்ளை மாளிகை பேச்சாளராக இருக்கும் 43 வயது ஜேன் சக்கி அடுத்த வாரம் தமது பணியை நிறைவு செய்யவிருக்கும் நிலையிலேயே அந்த இடத்திற்கு ஜீன் பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகச் செயலாளர்கள் பதவி வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கு நாளாந்தம் செய்தி அறிக்கைகள் வழங்குவதாக இருப்பதால் அந்தப் பதவி முக்கியமான ஒன்றாக உள்ளது.

 

Sun, 05/08/2022 - 12:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை