தாய்வானை சீனா இராணுவ ரீதியாக கைப்பற்றும் வாய்ப்பு

மேற்கத்திய அவதானிகள் எச்சரிக்கை

ரஷ்ய--, உக்ரைன் யுத்தத்தின் சாதக, பாதக பலன்களை சீனா வெகு உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தாய்வானை கபளீகரம் செய்யும் வகையில் ஒரு படையெடுப்பை மேற்கொண்டால் மேற்கத்திய மற்றும் தாய்வான் ஆதரவு நாடுகள் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்பதையும் மதிப்பிட்டு வருவதாகவும் மேற்கித்திய அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவை விட பலம் குன்றிய நாடான உக்ரைனால் ரஷ்ய படைகளுக்கு பலத்த சேதத்தை விளைவிக்க முடிந்திருப்பதோடு இரண்டு மாதங்களாக தாக்குப்பிடிக்கவும் முடிந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டும் அவர்கள், உக்ரைனின் எல்லை நாடுகள் நேட்டோ உறுப்பு நாடுகளாகத் திகழ்வதால் மேற்கு நாடுகளினால் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை செய்யவும் முடிந்தது. என்பதையும் குறிப்பிடுகின்றார்.

இதே சமயம் சீனாவுக்கு அருகில் குட்டித்தீவாக விளங்கும் தாய்வான் மீது மின்னல் வேகத் தாக்குதல் நடத்தி அதை குறுகிய காலத்தில் தன்வசப்படுத்திக்கொள்ளலாம் என சீன இராணுவம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிடம் யோசனை முன்வைத்திருப்பதோடு ஒரு தீவாகத் திகழும் தாய்வானுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளினால் கடல் வழியாக மட்டுமே ஆயுத விநியோகங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் கடல் முற்றுகையை சீனக் கடற்படை மேற்கொள்வதன் மூலம் தைவானுக்கான ஆயுத விநியோகத்தைத் தடுத்துவிடலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாய்வான் சீனாவின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது. ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் அனுபவங்கள் தைவான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொளவதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருப்பதாகவே சீனா நம்புவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Tue, 05/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை