காஷ்மீரத்து பண்டித பிராமணர்களைப் பற்றிய நாடகம் ஜம்முவில் பலத்த வரவேற்பு

காஷ்மீரத்து பண்டித பிராமண குலத்தை உயர்த்திப் பேசும் ' ஏக் அவுர் பீர்பால்' என்ற நாடகம் ஜம்முவில் அரங்கேற்றப்பட்டபோது கொட்டகை நிறைந்த காட்சிகளாக அந்நாடகத்தை மக்கள் பார்த்து ரசித்தார்கள்.

1812 ஆம் ஆண்டு காலத்தில் காஷ்மீர் ஆப்கானிய மன்னரான அஸிம்கானின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தபோது அவரது கொடுங்கோல் ஆட்சியை தாழ முடியாத காஷ்மீர் பிராமண சமூகம் அப்பிரதேசத்தை விட்டு வெளியேறிச் சென்றனர். அப்போது பீர்பால் தஹார் என்ற பண்டித பிராமணம் லாஹூரில் ஆட்சிசெய்துவந்த அரசர் ரஞ்சித் சிங்கிடம் சென்று அஸிம்பானை விரட்டியடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து காஷ்மீர் மீது ரஞ்சித் சிங் படையெடுத்து ஆப்கானிய மன்னரை விரட்டியடித்தார். காஷ்மீர் அல்டலாத சிங் இனத்தைச் சேர்ந்தவரிடம் காஷ்மீர் ஆட்சியதிகாரம் சென்றதை விளக்கும் இந்நாடகம் ஜம்முலில் மக்கள் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. காஷ்மீரத்து பண்டித பிராமண சமூகம் தற்போது காஷ்மீரை விட்டு வெளியேறிக்கொண்டிருப்பதாக இந்நாடகத்தில் கூறப்பட்டுள்ளது.

Wed, 05/11/2022 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை