தனது மனச்சாட்சிக்கு துரோகமிழைக்காதவர் ரஞ்சன் ராமநாயக்க

ரஞ்சன் ராமநாயக்க ஓருபோதும் யாருக்கும் தனது மனச்சாட்சியைக் காட்டிக் கொடுக்காத உண்மையுள்ள மக்கள் பிரதிநிதி எனவும், சிறைவாசம் அனுபவித்த போதிலும் அவர் தனது சுய மரியாதையைக் காப்பாற்றியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரஞ்சனே ஒருமுறை கூறியது போல, அவர்கள் அனைவரும் நண்பர்கள் தம்பி” என்ற கூற்று இந்நேரத்தில்மீண்டும் நினைவுக்கு வருவதாகக்கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ரஞ்சன் அவர்களின் நண்பன் இல்லாததால்இன்னும் சிறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கஅவர்களை பார்வையிட சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் கலந்து கொண்டார்.

Tue, 05/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை