ஜனாதிபதி, பிரதமர் கோரியும் நிதியமைச்சு பதவியை ஏற்க மறுத்த அலி சப்ரி

முஸ்லிம்களுக்காக பலவற்றை செய்துள்ளதாக தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் நிதி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறும் அலி சப்ரியிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் அவர் அதனை மறுத்துள்ளார். 5 முஸ்லிம் அமைச்சர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்தார்கள். அவர்கள் சாதிக்காத விடயங்களைக்கூட,

இந்த அமைச்சரவையில் இருந்து நான் சாதித்தேன். நல்லாட்சி அரசாங்கத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனை வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன .இந்த ஆட்சியில் எந்தவொரு வன்முறைச் சம்பவமும் நிகழாமல் பார்த்துக் கொண்டேன். முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக என்னால் முடிந்த பணிகளை விளம்பரமின்றி மேற்கொண்டேன். சிலவற்றில் அதில் வெற்றியும் கண்டேன். முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்தாக மாறியிருந்த சில விடயங்களை தடுத்து நிறுத்தினேன். மற்றும் சில விடயங்களை தாமதப்படுத்தினேன்.

14 ஆம் திகதி நடைபெற்ற ஆளும்தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் 91 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். அவர்கள் அனைவரினதும் முன் ஜனாதிபதி எனக்கு நிதி அமைச்சை பொறுப்பேற்கும் படி கேட்டார். நான் மறுத்து விட்டேன். அங்கிருந்த 91 பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவியை ஏற்கும்படி வலியுறுத்தினார்கள். அதனையும் மறுத்து விட்டேன்

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எனக்கு அமைச்சுப் பதவியை வழங்க விரும்புகிறார். அதனை அவர் என்னிடம் கூறினார். தயவுசெய்து எனக்கு எந்த அமைச்சுப் பதவியையும் தராதீர்கள், பொறுப்பேற்க மாட்டேன் என மறுத்துவிட்டேன்.

எனக்கு பதவிகளோ, சலுகைகளோ முக்கியமல்ல. அமைச்சுப் பதவி முக்கியமல்ல. இவற்றினூடாக கிடைக்கும் நலன்களைவிட, சமூக நலனை பிரதானமாக கருதுகிறேன். அமைச்சரவை சம்பளத்தைவிட எனது சட்டத்தொழில் மூலம் கிடைக்கும் ஊதியம் அதிகமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Mon, 05/16/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை