வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை

வட கொரியா, அதன் கிழக்குக் கரையோரத்திலிருந்து புவியீர்ப்பு ஏவுகணைகளை மீண்டும் சோதனை செய்துள்ளது.

ஜப்பான் கடலை நோக்கி வட கொரியா 3 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகத் தென் கொரிய இராணுவம் தெரிவித்தது. அவை குறுந்தொலைவு ஏவுகணைகள் என்று கூறப்பட்டது.

அதில் ஒன்று, அதன் சிறப்புப் பொருளாதார வட்டாரத்திற்கு வெளியே விழுந்ததாக ஜப்பான் கரையோரக் காவற்படை தெரிவித்தது.

வட கொரியா இவ்வாண்டில் இதுவரை 10க்கும் மேற்பட்ட ஏவுகணைச் சோதனைகளை நடத்தியுள்ளது.

வட கொரியா 2017 ஆம் ஆண்டு இடை நிறுத்திய அணு ஆயுத சோதனையை மீண்டும் ஆரம்பிப்பது பற்றிய சந்தேகங்களுக்கு மத்தியிலேயே இந்த புதிய ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது. வட கொரியாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டதன் மத்தியில், இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Sat, 05/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை