டுவிட்டரை வாங்கும் மஸ்க் திட்டத்தில் முட்டுக்கட்டை

டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலருக்கு வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இலோன் மஸ்க் கூறியுள்ளார்.

டுவிட்டர் தளத்தில் உள்ள தேவையற்ற, பொய்க் கணக்குகளின் எண்ணிக்கை 5 வீதத்திற்கும் குறைவு என்ற தகவலுக்கு ஆதாரங்கள் இன்னும் அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

அந்தத் தகவலை டுவிட்டர் இம்மாத ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. ஆதாரங்கள் கொடுக்கப்படாததால் தான் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின், அதில் உள்ள தேவையற்ற கணக்குகளை நீக்குவது தமது முன்னுரிமைகளில் ஒன்று என மஸ்க் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை. எனினும் மஸ்கின் இந்த அறிவிப்பு காரணமாக பங்குச்சந்தையில் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகச் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Sun, 05/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை