ரம்புக்கனை சம்பவம்: USA தூதுவர் கவலை

டுவிட்டர் பதிவில் தெரிவிப்பு

ரம்புக்கனையில் இருந்து வெளியான பயங்கரமான செய்தியைக் கேட்டு தான் கவலையடைந்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியூன் சங், ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டிக்கிறேன். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொலிஸார் மற்றும் அனைத்து தரப்பிலிருந்தும் அமைதியைக் கோருகிறேன். முழுமையான, வெளிப்படையான விசாரணை அவசியம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Thu, 04/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை