கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்திற்கான உரிமைக்கு MAS ஹோல்டிங் ஆதரவு

அமைதிவழி ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவதற்கும், கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்திற்கும் இலங்கைப் பிரஜைகள் கொண்டுள்ள உரிமைகளை ஆதரிப்பதாக MAS ஹோல்டிங் தெரிவித்துள்ளது.

நிகழும் சம்பவங்களுக்கு மத்தியில், சமகாலசமூக, பொருளாதார நெருக்கடியை அமைதியாகவும், நிலைபேறான வகையிலும் தீர்ப்பதற்கு துரிதமானதும், தீர்க்கமானதுமான நடவடிக்கையின் அவசியத்தை MAS மீளவலியுறுத்துகிறது. ஒருபொறுப்புள்ள ஸ்தாபனம் என்ற ரீதியில், மாற்றத்திற்கும், நல்லாட்சிக்காகவும் விடுக்கப்படும் அழைப்பை நிபந்தனையின்றி ஆதரிப்பதோடு, சட்டத்தையும், அரசியல் யாப்பிற்கு உட்பட்ட நடைமுறைகளையும் மதிப்பதுடன், மக்களின் குரலுக்கு கண்ணியம் கொடுத்து, அதற்கமைய நடவடிக்கஎடுக்குமாறு தேசத்தின் தலைவர்களிடம் அக்கறையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையின் தனியார் துறையில் ஆகக்கூடுதலானவர்களை வேலை க்கு அமர்த்திய, ஆகக்கூடுதலாக ஏற்றமதிசெய்யும் நிறுவனமென்ற ரீதியில், நாட்டின் பொருளாதார ஸ்திரநிலையைப் பேணுவதில் எமக்குள்ள வகிபாகத்தையும் MAS நுண்மையாக புரிந்து கொண்டுள்ளது. இந்தவிடயத்தில், எமதுவாடிக்கையாளர்களுக்கான கடப்பாடுகளை தங்குதடையின்றி நிறைவேற்றி, எமது சகாக்கள் 92,000 பேரினதும், அவர்களது குடும்பத்தவர்களதும்,நாட்டினதும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதன் மீதுகவனம் செலுத்துவது முக்கியமானது.

எமதுவரலாற்றின் மிகவும் கொந்தளிப்பான, முக்கியமான தருணங்களில், ஆடையுற்பத்தித்துறையானது இலங்கைப் பொருளாதாரத்திற்கு உயிரூட்டுவதாகத் திகழ்ந்துள்ளது. நாம் ஒன்றாக இருந்து, இந்தநெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து, எமதுநாட்டை மென்மேலும் சிறப்பானதாகக் கட்டியெழுப்பக் கூடிய மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்றநம்பிக்கை எமக்குத் தொடர்ந்தும் உண்டு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 04/26/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை