இலங்கை அதிகாரிகளுடன் IMF விரைவில் கலந்துரையாடல்

இலங்கைக்காக நடைமுறைப்படுத்தக்கூடிய கடன் திட்டம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் வரும் நாட்களில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதன் பேச்சாளர் ஜெரி ரைஸை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் இடம்பெறவுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் வொஷிங்டன் விஜயத்தில் அந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒத்துழைப்புடனான, நிதித் திட்டத்தை நோக்கிச் செல்வது தொடர்பில், இலங்கை அரசாங்கம் தமது அபிலாஷையை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

 

 

Sat, 04/02/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை