சென். ஜோசப் கல்லூரியில் தீ கட்டுப்பாட்டுக்குள்

சென். ஜோசப் கல்லூரியில் தீ கட்டுப்பாட்டுக்குள்

 

கொழும்பில் பிரபல பாடசாலையான மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் நேற்று திடீர் தீ அனர்த்தம்  ஏற்பட்டுள்ளது. நேற்று 12:25 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மேற்படி தீ அனர்த்தம் ஏற்பட்டதாகவும் இந்த அனர்த்தத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென்றும் சேதங்கள் தொடர்ந்தும் இதுவரை மதிப்பிடவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

கட்டடமொன்றில் தீ பற்றியதுடன் உடனடியாகவே தீயணைக்கும் படையினர் வருகை தந்து தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

05 வாகனங்களில் 18 தீயணைப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் வருகை தந்து தீயணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 04/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை