காசா மீது இஸ்ரேலிய படை வான் தாக்குதல்

இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று காசா பகுதி மீது தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுத உற்பத்தித் தளம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் பாதிப்புகள் பற்றி உறுதி செய்யப்படவில்லை என்று பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நிலத்தில் இருந்து வானைத் தாக்கும் ஏவுகணை மூலம் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

முற்றுகையில் இருக்கும் காசாவில் இருந்து கடந்த திங்கட்கிழமை தெற்கு இஸ்ரேல் மீது வீசப்பட்ட ரொக்கெட் குண்டு ஒன்று இடைமறிக்கப்பட்ட நிலையிலேயே இஸ்ரேலின் இந்த வான் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தின் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு மத்தியில் கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற முதல் தாக்குதலாக இது உள்ளது.

Wed, 04/20/2022 - 07:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை