பாகிஸ்தான் ஜனாதிபதியினால் அந்நாட்டு பாராளுமன்றம் கலைப்பு

- 90 நாட்களுக்குள் தேர்தல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆலோசனையின் பேரில் அந்நாட்டு ஜனாதிபதியினால் பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, இன்று (03) பிரதி சபாநாயகர் காசிம் கான் சூரி வாக்கெடுப்பை நடத்தாது, இது அரசியலமைப்பிற்கு முரணானது எனவும், இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து பிரேரணையை நிராகரித்திருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதியிடம் இம்ரான் கான் கோரிக்கை விடுத்திருந்தார்.

இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் அண்மையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட குறித்த தீர்மானத்திற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும் அரசாங்கத்தின் மீது வைக்கின்ற ஒரு சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே தற்பொழுது பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 90 நாட்களுக்குள் அங்கு தேர்தல் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமருக்கு ஆதரவாக, பாகிஸ்தான் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Sun, 04/03/2022 - 16:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை