உலக ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் மறைவு

புனித மக்கா மாநகரில் நல்லடக்கம்

 

பிரபல இஸ்லாமிய அறிஞரும் அகில உலக ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவருமான சங்கைக்குரிய நஜ்முல் உலமா அஷ் ஷெய்ஹ் அஜ்வாத் அப்துல்லாஹ் அல் பாஸி அல் மக்கி அஷ் ஷாதுலி (ரஹ்) நேற்று முன்தினம் (06) சவுதி அரேபியாவின் புனித மக்காவிலுள்ள  பைதுல் பாஸியில் காலமானார். அன்னாரின் ஜனாஸா அன்றைய தினம் இரவு புனித மக்காவில் உள்ள ஜன்னதுல் முஅல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஷாதுலிய்யா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவராக இருந்த மர்ஹூம் அஷ் ஷெய்ஹ் அப்துல் காதர் அல் பாஸி அல் மக்கி அஷ் ஷாதுலி (ரஹ்) இறையடி சேர்ந்த பின்னர் ஷாதுலிய்யா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவராக நஜ்முல் உலமா அஷ் ஷெய்ஹ் அஜ்வாத் அப்துல்லாஹ் அல் பாஸி அல் மக்கி அஷ் ஷாதுலி ரஹ்மதுல்லாஹி அலைஹி நியமனம் பெற்றதோடு உலகளாவிய ரீதியில் ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மீக வழிமுறையை பரப்புவதில் அளப்பெரிய பங்காற்றினார்.

இலங்கையின் சாந்தி, சமாதானம், அபிவிருத்தி, இனங்களுக்குமிடையிலான நல்லிணக்கத்துக்காக அடிக்கடி புனித மக்காவிலிருந்து துஆப் பிராத்தனை செய்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னார் இலங்கைக்கு பல முறை விஜயம் செய்து நாட்டில் பல பாகங்களிலுமுள்ள ஷாதுலிய்யா தரீக்கா இஹ்வான்களை சந்தித்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

பேருவளை விசேட நிருபர்

Fri, 04/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை