யோசப் கல்லறை மீது பலஸ்தீனர் தாக்குதல்

பைபிளில் வரும் யோசப்பின் அடக்கஸ்தலம் என்று நம்பப்படும் இடம் பலஸ்தீனர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் நப்லுஸ் நகரில் இருக்கும் இந்தத் தலம் மீதான தாக்குதல், “வெறித்தனமாக அழிப்பு நடவடிக்கை” என்று இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் தாக்குதல்கள் மற்றும் பதற்ற சூழவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு கடும் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையே இந்தக் கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளது. கல்லறைக்கு மேலால் தொங்கும் விளக்கை பலஸ்தீனர்கள் தாக்கும் வீடியோ சமூக ஊடுகத்தில் வெளியாகியுள்ளது.

இந்தக் கல்லறையை யூதர்கள் பெரிதும் மதிப்பதோடு, இது யோசப் அல்லது 18 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஷெய்க் யூசுப் தாவிக்காத் இஸ்லாமிய அறிஞருடையது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

Thu, 04/14/2022 - 15:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை