ஷங்காய் முடக்கம்: தீர்ந்துவரும் உணவு

சீனாவிலுள்ள ஷங்காயில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட முடக்கநிலை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் சிரமம் கண்டுள்ளனர்.

வீட்டிலேயே இருக்க வேண்டிய குடியிருப்பாளர்கள் உணவு, குடிநீர் போன்றவற்றை எளிதில் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

உணவு, மளிகைப்பொருள் ஆகியவற்றை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நெருக்குதலை எதிர்நோக்குகின்றன. இதற்கிடையே ஷங்ஹாயில் அரிசி, இறைச்சி போன்ற உணவுப்பொருட்கள் தேவையான அளவில் இருப்பதாக மாநிலத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் திடீரென விநியோகம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பது பற்றிக் கலந்துபேச மாநில அதிகாரிகள் இரவு வேளைகளில் சந்திப்புகளை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

Fri, 04/08/2022 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை