ஐ.ம.சக்தியினால் முன்னெடுக்க முடிவு
ஐக்கிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியில் அரசாங்க எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளது.
மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியதற்கும், எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கம் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசாங்கம் பொறுப்பை ஏற்கத் தவறியுள்ள அதேவேளை தீர்வுகளையும் வழங்கத் தவறியுள்ள நிலையில் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினரான ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். பொதுமக்களை ஒடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக தமிழ்,சிங்கள புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமையை தாங்க முடியாத பொதுமக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
from tkn