இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் தொடர்ந்தும் தேடல்

கொத்மலை பொலிஸ் பகுதியில், வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவேளை, நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், இருவர் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (13) இரண்டாவது நாளாகவும் கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதும் ஒரு யுவதியின் சடலமே கண்டு பிடிக்கப்பட்டது. எனினும், இளைஞர் ஒருவரினதும், யுவதி ஒருவரினதும் சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

பெய்து வரும் மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக நேற்று (13) மாலை தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது.

இதேவேளை இன்றைய (14) தினமும் யுவதியையும், இளைஞரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர்)

Thu, 04/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை