எமது நாட்டுக்காக எத்தகைய பொறுப்பையும் ஏற்கத் தயார்

கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்

நாட்டுக்காக எந்தவொரு பொறுப்பையும் கட்சி வேறுபாடுகளின்றி ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லையாயின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது போகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டு நிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், அமைச்சர் அலி சப்ரியுடன் பேசினேன்.

சில ஆலோசனைகளை வழங்கினேன். எமக்கு அசை்சு பதவி முக்கியமில்லை. மத்திய வங்கி ஆளுநருடனும் பேசினேன்.இன்னும் தாமதிக்க முடியாது. பொருளாதாரத்தை அஜித் நிவாட் கப்ரால் நாசமாக்கினார்.

நிலைமையை உணர்ந்து ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்றார்.

Wed, 04/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை