அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்கு நிதியுதவி

உலக வங்கி அனுமதி வழங்கியது - அலி சப்ரி

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் இரண்டு வாரக்காலப்பகுதிக்குள் சமையல் எரிவாயு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிப்பதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Wed, 04/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை