வாழைச்சேனை இளம் தாய் ஓமானில் மரணம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய இளம் தாயொருவர் ஓமான் நாட்டில் மரணமடைந்துள்ளார்.

ஒரு பெண் பிள்ளையின் தாயான இவர், நான்கு மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் காரணமாக ஓமான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

இவ்வாறு அங்கு சென்ற அந்த பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்துள்ளதாக ஓமான் நாட்டிலிருந்து தமக்கு தகவல் கிடைத்ததாக மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குறித்த பெண்மணி மூன்று நாட்களுக்கு முன்னர் மரணித்த நிலையில், குடும்பத்தாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்ததாக குடும்பத்தார் மேலும் தெரிவித்தனர்.

அங்கு மரணமடைந்த பெண்ணின் உடலை அந்நாட்டிலே நல்லடக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

(எச்.எம்.எம். பர்ஸான்)

Fri, 04/15/2022 - 10:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை