இரு புதிய கொவிட் தொற்று துணை ரகங்கள் பற்றி ஆய்வு

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபுடன் தொடர்புடையதாக புதிதாக உருவெடுத்துள்ள இரண்டு துணைரகங்களை ஆராய்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பி.ஏ.4, பி.ஏ.5 ஆகிய துணைரகங்கள் மேலும் ஆபத்தானவையா, எளிதில் பரவக்கூடியவையா என்பது குறித்து ஆராயப்படுவதாகக் கூறப்பட்டது.

மனிதர்களின் தடுப்பாற்றலை மிஞ்சக்கூடிய அளவில் துணைரகங்களுக்கு ஆற்றல் இருக்கிறதா என்பதை மேலும் ஆராய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியது.

பி.ஏ.1, பி.ஏ.2, பி.ஏ.1.1, பி.ஏ.3 ஆகிய துணைரகங்கள் ஏற்கனவே கண்காணிக்கப்படுகின்றன. உலகளவில் சோதிக்கப்பட்ட மாதிரிகளில் பி.ஏ.2 துணைரகமே அதிகம் தென்படுகிறது.

இருப்பினும், அதன் வீரியம் அவ்வளவாகக் கடுமையானது இல்லை என்று தெரியவந்துள்ளது.

பி.ஏ.4, பி.ஏ.5 ஆகிய துணைரகங்கள் தொடர்பில் 10க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தென்னாபிரிக்கா, டென்மார்க், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டது.

Fri, 04/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை