மே தினத்தன்று காலி முகத்திடல் போராட்ட களத்துக்குள் வர வேண்டாமென அறிவிப்பு

அரசியல் கட்சிகளுக்கு இளையோர் செய்தி

தொழிலாளர் தினமான நாளை 01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலிமுகத்திடல் போராட்டக்களத்துக்கு அரசியல்வாதிகளை அழைத்துக்கொண்டு வர வேண்டாமென போராட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, மே தினத்தன்று தமது கட்சியினரை காலிமுகத்திடல் போராட்டகளத்துக்கு செல்லுமாறு அறிவித்திருந்தார்.

இதனையடுத்தே போராட்ட களத்திலுள்ள இளைஞர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் கடந்த 21 நாட்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்த அரசியல் கட்சிகளின் ஆதரவுமின்றி இளைஞர்கள் தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

 

 

Sat, 04/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை