இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நிலைமை, சவால்கள்

இந்திய நிதி அமைச்சருடன்  நிதியமைச்சர் அலி சப்ரி ஆராய்வு

 

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான அணுகுமுறைகள் குறித்து இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையில் வொஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடலில் ஈடுபடும் நோக்கில் நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட  பிரதிநிதிகள் குழு 17 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டனர்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகர் நோக்கிச் சென்ற இந்த பிரதிநிதிகள் குழுவில் மத்திய வங்கி ஆளுநர், பேராசிரியர் நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன உள்ளிட்ட நிதி அமைச்சு மற்றும் மற்றும் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நிதி அமைச்சர், அலி சப்ரி உள்ளிட்ட பிரதிநிதிகள் சந்திப்பை மேற்கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

Wed, 04/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை