சிற்றுண்டிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் நிலை

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து சிற்றுண்டிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

2,675 ரூபாவாக காணப்பட்ட 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 2,185 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,860 ரூபாவாகுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

1,071 ரூபாவாக காணப்பட்ட 05 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 874 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,945 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

506 ரூபாவாக இருந்த 2.3 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 404 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 910 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய உணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால் தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பரோட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

ஏனெனில் தாங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டால் உண்மையில் இந்த தொழிற்துறை வீழ்ச்சியடையுமென சிற்றுண்டி உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Thu, 04/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை