உக்ரைனின் மரியுபோலில் ரஷ்ய படை முன்னேற்றம்

உக்ரைனின் மரியுபோல் நகரின் பிரதான பகுதியை கைப்பற்றி இருப்பதாகவும் அங்கு சிறு பகுதியின் உருக்குத் தொழிற்சாலை ஒன்றில் உக்ரைன் படை சிக்கி இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த பல வாரங்களாக முற்றுகையில் இருக்கும் தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் உக்கிர மோதல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா தற்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பை சுதந்திரமாக உறுதி செய்ய முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இந்த நகர் ரஷ்யாவிடம் வீழ்ந்தால் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா அங்கு கைப்பற்றும் முதல் நகராக இது இருக்கும்.

“மரியுபோலின் ஒட்டுமொத்த நகர்புற பகுதியும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய உக்ரைனிய குழு தற்போது அசொவ்ஸ்டோல் உலோக ஆலை இருக்கும் பகுதியில் முடக்கப்பட்டுள்ளது” என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இகோர் கனசென்கோவ் தெரிவித்துள்ளார்.

“தமது ஆயுதங்களை கீழே வைத்து சரணடைவது மாத்திரமே அவர்கள் உயிரை காப்பதற்கு ஒரே வழியாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 1,464 உக்ரைனிய படையினர் ஏற்கனவே சரணடைந்திருப்பதாக அவர் கூறினார்.

மரியுபோலின் வீழ்ச்சி இந்தப் போரில் ரஷ்யாவின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். இது டொன்பாஸ் பிராந்தியத்தின் பிரதான துறைமுகமாக உள்ளது. இந்தப் பிராந்தியத்திலேயே ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் இரு மாகாணங்கள் அமைந்துள்ளன.

மரியுபோல் நகரைத் தற்காக்கும் கடைசிப் படையினரை நீக்கினால், இருநாட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகள் துண்டிக்கப்படும் என்று உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கூறினார்.

Mon, 04/18/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை