ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் சபை இரு தடவைகள் ஒத்திவைப்பு!

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சபையில் நேற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டதோடு ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு எம்.பிக்களுக்கிடையே மோதல் நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக சபாநாயகர் 10 நிமிடங்ளுக்கு சபையை ஒத்திவைத்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று கூடியது. சபாநாயகரின் அறிவிப்பு மற்றும் தினப்பணிகளை தொடர்ந்து நாட்டு நிலைமை தொடர்பில் சபைக்குள் சர்ச்சை ஏற்பட்டது. நிகழ்ச்சி நிரலுக்கமைய பாராளுமன்ற  உறுப்பினர்கள் செயற்படாத காரணத்தினால் சபையை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் முதலில் ஒத்திவைத்தார். மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பமான போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதன் போது இரண்டாவது தடவையாக சபாநாயகர் பாராளுமன்றத்தை மீண்டும் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 04/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை