சமூக வலைத்தள முடக்கத்தை அனுமதிக்க முடியாது

- மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுக்களும் வேண்டுகோள் 

சமூக வலைத்தள முடக்கத்தை அனுமதிக்க முடியாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், டிஜிட்டல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

தான் தற்போது பயன்படுத்துவது போன்ற VPN சேவைகள் இருப்பதால் இது ஒரு பயனற்ற விடயம் என்றும். அதிகாரிகள் இது தொடர்பில் முறையான அணுகு முறையை பின்பற்றி இம்முடிவு தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

 

 

இதேவேளை, சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் எனவும். அதனை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் மின்வெட்டு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதால், சமூக வலைத்தளம் முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Sun, 04/03/2022 - 14:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை