நிதி அமைச்சை ஏற்குமாறு சஜித்,அநுரவுக்கு அழைப்பு

முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அறிவிப்பு

முடிந்தால் 06 மாதங்களுக்கு நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்று தமது திறமையை காண்பிக்குமாறு சஜித் பிரேமதாசவுக்கும் அநுர குமார திசாநாயாக்கவுக்கும் ஆளும் தரப்பு எம்.பியும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க அழைப்பு விடுத்தார். நாட்டின் தற்போதைய நிலைமை  தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், நிதி அமைச்சர் பொறுப்பை 06 மாதங்கள் ஏற்று நாட்டு மக்களுக்கு தனது திறமையை காட்டுங்கள்.முழு ஒத்துழைப்பையும் தருகிறோம். இதே சவாலை அநுர குமாரவுக்கும் முன்வைக்கிறோம்.நிதி அமைச்சு பதவியை ஏற்கத் தயாரா? அதனை செய்யாது பொருளாதார திட்டமின்றி இளைஞர்களை குழப்பி வருகின்றனர் என்றார்.

 

Thu, 04/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை