தனமல்வில வார சந்தையில் ஒருவர் வெட்டிக் கொலை!

தனமல்வில வாராந்த சந்தை வளாகத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாரச்சந்தைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வந்த நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தினால்  தாக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மரணமானவர் கித்துல்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Sat, 04/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை