பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் - கொமர்ஷல் வங்கி ஒப்பந்தம்

AIA இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் பெண்களுக்கான திட்டமான 'எய சுரக்கின AIA' ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்புடன் இலங்கை முழுவதுமுள்ள பெண்களின் நிதியியல் ஸ்திரத்தன்மையினை அதிகரிப்பதன் மூலமாக அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகப் பணியில் பெண்கள் IFC-DFAT திட்டத்தின் கீழ் கொமர்ஷல் வங்கி சிலோன் (CBC) மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்துடன் ((IFC)) இணைந்து AIA மற்றுமொரு மைல்கல்லை எட்டியிருக்கின்றது.

கொமர்ஷல் வங்கி சிலோனுடனான ((CBC)) இந்த முயற்சியானது மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் நீண்ட காலத்திற்கு இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்யும் வகையிலான பெண்களை ஊக்கப்படுத்தும் மற்றும் அவர்களின் நீண்ட கால நிதியியல் உறுதிப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் கொமர்ஷல் வங்கியின் 'அணகி' மகளிர் கணக்கை வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களின் அன்பிற்குரியவர்களுக்கு மிகவும் நியாயமான ஆயுள் காப்புறுதி மற்றும் நல்வாழ்வுத் தீர்வுகளை வழங்குகின்றது.

'அணகி' மகளிர் கணக்கை வைத்திருக்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைக்கும் வருடமொன்றுக்கு ரூபா.1,100 எனும் மிகவும் குறைவான கட்டணத்திலிருந்து ஆரம்பிக்கும் ரூபா.1 மில்லியனிலிருந்து 5 மில்லியன் வரையிலான மிகவும் பொருத்தமான ஆயுள் காப்புறுதித் தீர்வுகளையே AIA இன்ஷுரன்ஸ் வழங்கும்.

இந்த ஆயுள் காப்புறுதித் திட்டமானது ஆயுள் காப்புறுதிதாரரின் இயற்கையான மற்றும் விபத்து மூலமான மரணங்கள் இரண்டையும் காப்பிடுகின்றது. இதற்கு மேலதிகமாக AIA இனுடைய ஆயுள் காப்புறுதித் தீர்வுகளைக் கொள்வனவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது வீடுகளில் மிகவும் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் இருந்தவாறே Fitzky செயலியினூடாக ஒவ்வொரு மாதமும் 12 இலவசமான நிகழ்நிலை (ஒன்லைன்) ஆரோக்கிய நல்வாழ்வு வகுப்புக்களில் கலந்து கொள்வதற்குத் தகுதி பெறுவார்கள். மேலும் நாடு முழுவதுமுள்ள '‘My Dentist’' சிகிச்சை நிலையங்கள் ஊடாக தங்களது பற்சிகிச்சை ஆலோசனைகளை 15மூ விலைக்கழிவுடன் பெறுவதற்கும் இவர்கள் தகுதி பெற முடியும்.

பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி கருத்துத் தெரிவிக்கையில்,

'தங்களது பெண் வாடிக்கையாளர்களின் நிதியியல் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையினை கூட்டாக அதிகரிப்பதற்காக இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றான கொமர்ஷல் வங்கியுடன்கூட்டாண்மையினை ஏற்படுத்துவதையிட்டு AIA மிகவும் பெருமையடைகின்றது' என்றார்.

கொமர்ஷல் வங்கியின் நிர்வாகப் பணிப்பாளர் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சி.ரெங்கநாதன் கருத்துத் தெரிவிக்கையில், 'நாங்கள் பிரதானமாக கவனம் செலுத்துவோரில் பெண்களும் உள்ளனர். எங்களுடைய 'அணகி மகளிர் வங்கிச் சேவையின்' முதலீட்டிற்கு இந்த தனித்துவமான அனுகூலத்தினைச் சேர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்' என்றார்.

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IFC இன் நாட்டிற்கான முகாமையாளர் லீசா கெஷ்னர் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கைப் பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பை அதிகரித்தல், அதிர்ச்சிகளைத் தாங்கும் திறனை கட்டியெழுப்பல் மற்றும் வியாபாரத்தை மேம்படுத்தல் ஆகியவற்றுக்கு உதவுவதில் பெண்களுக்கான காப்புறுதிச் சந்தையின் பயன்படுத்தப்படாத சாத்தியமான திறனை உணர்வதானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்" என்றார்.

மேலதிக விபரங்களுக்கு 0112 353 353 ஊடாக கொமர்ஷல் வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறோ அல்லது அண்மையிலுள்ள கொமர்ஷல் வங்கிக் கிளைக்கு செல்லுமாறோ கேட்கப்பட்டுள்ளது.

Wed, 04/27/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை