சக விமானப் பயணிக்கு குத்துவிட்ட மைக் டைசன்

பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் தம்முடன் விமானத்தில் பயண செய்த ஒருவரைச் சரமாரியாக குத்தும் காட்சி சமூக தளங்களில் பரவிவருகிறது. 

அடிவாங்கிய நபர் டைசனின் விசிறி என நம்பப்பகிறது. விமானத்தில் டைசனைப் பார்த்ததும் அவருக்கு ஒரே ஆனந்தம். டைசனுடன் பேசி புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ஆனால், அந்த நபரின் வாய் ஓயவில்லை. கலகலப்பாகத் ஆரம்பித்த உரையாடல், பின்னர் டைசனுக்கு எரிச்சலூட்ட தொடங்கியது. பலமுறை டைசன் அவரை வாயை மூடச்சொல்லியும் அவர் காதில் வாங்கவில்லை.

அடையாளம் தெரியாத அந்த நபர் தண்ணீர்ப் புட்டியை டைசன் மீது தூக்கியேறிந்ததாகவும் கூறப்பட்டது. கோபமடைந்த அந்த நபரின் முகத்தை ஓங்கி பலமுறை குத்தினார். நபரின் நெத்திலியிருந்து இரத்தம் மளமளவென கொட்டியது. 

அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சம்பவம் குறித்து பொலிஸில் புகார் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  

 

Sun, 04/24/2022 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை