- இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து
கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான “ஈஸ்டர் திருநாளை” மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானின் “ஈஸ்டர் திருநாள்” மனித நேயமிக்க கிறிஸ்தவப் பெருமக்கள் மகிழ்வுறும் இனிய நாளாகும்.
இயேசு கிறிஸ்துவின் போதனைகளிலிருந்து கற்றுக் கொண்டு, மனித குலத்தின் பொதுவான நலனுக்காக அனைவரும் இப்புனித நாளில் ஒன்றினைவோம்.
சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவிய இயேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்வினையொட்டி, நோன்பில் இருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். ஏசுபிரான் போதித்த அன்பை மாறாமல் அனைவரிடத்திலும் பகிர்ந்துக்கொள்வோம். அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
from tkn