ஷங்ஹாயில் வைரஸ் கட்டுப்பாடுகள் தீவிரம்

சீனாவின் ஷங்ஹாய் நகர அதிகாரிகள், கொவிட்-19 வைரஸ் பரவல் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அவற்றின்படி, நகரம் முழுதும் வைரஸ் பரவல் பரிசோதனைகள் மீண்டும் மேற்கொள்ளப்படும்.

நோய்த் தொற்று முற்றிலும் நீங்கிய பின்னரே 3 வார முடக்கநிலை கட்டங்கட்டமாகத் தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

நகரின் வைரஸ் தொற்றுச் சூழலில் ஆக்ககரமான போக்கு தென்பட்டாலும் சமூகத்தில் யாரும் நோய்வாய்ப்படாமல் இருப்பதே தங்களின் இலக்கு என்று அதிகாரிகள் கூறினர்.

கடுமையான விதிமுறைகளுக்கு மக்கள் உட்பட்டு நடந்தால் வாழ்க்கை விரைவில் வழக்கநிலைக்குத் திரும்பிவிடக்கூடும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

ஷங்ஹாயில் புதிதாக 15,000 வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sat, 04/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை